ஆகஸ்ட் 1ல் சரண்டர் படம் ரிலீஸ்

ஆகஸ்ட் 1ல் சரண்டர் படம் ரிலீஸ்
இயக்குநர் அறிவழகனிடம் துணை இயக்குனராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ள படம் “சரண்டர்”. இந்த படத்தை அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்டர் குமார் தயாரித்துள்ளார். இதில் ஹீரோவாக தர்ஷன் நடிக்க, லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். கிரைம்-ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு இயக்குனர் கவுதமன் கணபதி கூறியது, போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று காணாமல் போகிறது, மற்றொருபுறம் தேர்தலுக்காக கொடுக்க வைத்திருந்த பணம் காணாமல் போகிறது இந்த இரண்டையும் தேடி செல்லும் இரண்டு குரூப்புக்கு இடையே நடக்கும் சண்டை, அதைத்தொடர்ந்து ஒரு எமோஷனலாக நடக்கும் விஷயம் தான் படத்தின் மையக்கரு என்றார்.

Comments (0)
Add Comment