டாக்டரான ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகையான கதை..!
தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி 2 படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் மருத்துவ படிப்பை முடித்த ஐஸ்வர்யா லட்சுமி, சினிமாவில் என்ரியான து குறித்து இயக்குனர் அலெப்பி அஷ்ரப் கூறியது, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளான பெற்றோரின் ஒரே மகள் ஐஸ்வர்யா லட்சுமி. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவரை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும். அவருக்கு ஒரு மருத்துவரை திருமணம் செய்து வைத்து குடும்பத்துடன் குழந்தைகளோடு வாழ வேண்டும் என அவரின் பெற்றோர் ஆசை பட்டனர்.ஆனால் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து,ஹவுஸ் சர்ஜன் செய்து கொண்டிருந்த போது ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங் துறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு சினிமாவிலும் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக உள்ளார்.ஆனாலும் தங்களது மகள் சினிமாவிற்குள் நுழைந்தது அவரது பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை தங்களது கனவுகள்முற்றிலும் தகர்த்தெறியப்பட்டதாக அவர்கள் ஏங்கி தவிப்பதாக கூறினார்.