கதைதான் ஹீரோ: இயக்குனர் ஹாரூன்

கதைதான் ஹீரோ: இயக்குனர் ஹாரூன்
மணி தெலகுட்டி இயக்கத்தில் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள படம் திரிகண்டா’.
இந்த படத்தில் ஷ்ரத்தா தாஸ் ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.மேலும் சாஹிதி அவான்சா, கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் மற்றும் ஷாஜித் இசையமைத்து ள்ளனர்.எஸ்.வி.எம்.ஸ்டூடிேயாஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் ஹாரூண், கேபிள் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் இயக்குனர் ஹாரூண் பேசியது, தமிழ் சினிமா மாறி வருகிறது இனிமேல் நல்ல கதைகள் வரும். கதைதான் ஹீரோ. இப்போதைய சூழலில் கதாநாயகர்களை விட கதை நாயகர்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஹீரோக்கள் பின்னால் ஓடாமல் கதையை நம்ப வேண்டும் என்றார்.

Comments (0)
Add Comment