35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் ஆன்மீக திரைப்படம் “ராகு கேது”
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், துரை. பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இதில் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணு வாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு கதை, வசனம், பாடல்களை கே.பி.அறிவானந்தம் எழுதியுள்ளார்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, பின்னணி இசையை பரணிதரன், பாடல்கள் இசையை சதானந்தம் அமைத்துள்ளார். ராகுகேது உருவான வரலாறு,அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இதில் சொல்லப்பட்டுள்ளது அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.