10 கோடி பேர் ரசித்த பூஜா ஹெக்டேவின் மோனிகா பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்தில் இடம் பெற்ற, ‘மோனிகா’ பாடல் வெளியான போதே ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் ரீல்ஸ்களால் வைரலானது. படம் ரிலீஸ் ஆன பிறகு தியேட்டரிலும் இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் சாஹிரின் நடனம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில்,மோனிகா பாடல் யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை சுப்லாஷ்னி மற்றும் அனிருத் இணைந்து பாடியிருந்தனர்.