விஜய் சேதுபதி,சம்யுக்தா நடிக்கும் படம் ஷூட்டிங் தொடங்கியது
இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக நடிக்கும் பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது. இப்படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார். மேலும் தபு மற்றும் விஜய் குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். படத்திற்காக ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்ட செட்டில் விஜய் சேதுபதி, சம்யுக்தா பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.