சாருகேசி படமாக காரணம் ரஜினி தான்: சுரேஷ் கிருஷ்ணா

சாருகேசி படமாக காரணம் ரஜினி தான்: சுரேஷ் கிருஷ்ணா
ஒய். ஜி.மகேந்திரனின் சாருகேசி
என்ற நாடகத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் சுகாசினி, சத்யராஜ்,மதுவந்தி, சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராஜ ஐயப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார்
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா
சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசியது, இந்த படத்தின் கதையை முதலில் நாடக வடிவத்தில் பார்த்து அதை படமாக பண்ண சொன்னவர் ரஜினி தான். ஒரு நாவலை படமாக எடுத்துள்ளேன். நாடகத்தை சினிமாவாக மாற்றுவது ரொம்ப கஷ்டம். அதனால் இந்த நாடகத்தை முதலில் வீடியோவாக எடுத்து தர சொல்லி அதை பார்த்து திரைக்கதை எழுதினேன் என்றார்.

Comments (0)
Add Comment