சபாநாயகர் வெளியிட்ட பிரஜாபதி பட டிரெய்லர்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘பிரஜாபதி’. படத்தை பி.ரூபர்ட் ரகுநாதன் இயக்குகிறார். ஏ.பி.எப்.புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லரை தமிழக சட்டபேரவை சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் வெளியிட்டார். படம் பற்றி இயக்குனர் ரூபர்ட் கூறியது, பிரஜாபதி படம் இயேசு பிறந்தது முதல் சிலுவையில் அறைந்தது, மீண்டும் உயிர்த்தெழுந்தது வரை இதில இடம் பெற்றுள்ளது.இதில் நடித்துள்ளவர்கள், திரைப்படத் துறையில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட தொழில்முறை நடிகர், நடிகைகள் அல்ல, 25 ஆண்டுகளுக்கு மேலாக பிரஜாபதி நாடகத்தில் சேவை செய்து வரும் கலைஞர்கள் ஆவர்.விரைவில் இப்படத்தை பிரமாண்டமாக திரையில் அனைவரும் காண்பீர்கள்’ என்றார்.