பனையின் மகத்துவத்தை கூறும் பனை

பனையின் மகத்துவத்தை கூறும் பனை
பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிக ளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு உருவாகியு ள்ள படம் பனை. இதில் ஹீரோவாக ஹரிஷ் பிரபாகரன் நடிக்க, ஹீரோயினாக மேக்னா நடித்திருக்கிறார்.இவர்களுடன் வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி,டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுத மீரா லால் இசை அமைத்துள்ளார்.
படத்தை ஆதி பி.ஆறுமுகம் இயக்கியுள்ளார். இப்படத்தை வரும் 26 ம் தேதி ஆக்சன் ரீயாக்சன் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Comments (0)
Add Comment