ஜனநாயகன் படத்துக்கு அடுத்த சிக்கல்

ஜனநாயகன் படத்துக்கு அடுத்த சிக்கல்
எச். வினோத் இயக்கத்தில்,விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது. தற்போது வரை சென்சார் சான்று கிடைக்காததால்,தேர்தல் முடிந்த பின்னர், மே அல்லது ஜூன் மாதத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட யோசித்து வருகின்றனர். இந்த படத்துக்காக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரூ. 500 கோடி வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. திட்டமிட்ட தேதியில் இருந்து 5 மாதங்கள் கழித்தே படம் வெளியாவதால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.இந்த நிலையில்,படத்தின் ஓடிடி உரிமையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)
Add Comment