சிறை பட நடிகரின் அடுத்த படம் டேக் ஆப்
‘சிறை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எல்.கே.அக்ஷய் குமார். தற்போது இவர் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ‘டியூட்’ பட நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்துக்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய,ஜென் மார்ட்டி ன் இசையமைக்கிறார்.இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் கோடை விடுமுறை யில் ரிலீஸ் ஆக உள்ளது.