துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் துவக்கம்

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் துவக்கம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்ததால் துருவ்வின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது.தற்போது, தமிழில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 4-வது படத்தில் துருவ் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மேலும், இதில் பிருத்வி சாய் தீனா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயின் ஆக ருக்மணி வசந்த் கமிட்டாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த துவக்க விழா பூஜையில், இயக்குநர்கள் ரவிக்குமார், கீர்த்தீஸ்வரன் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment