தனுசுக்கு தேசிய விருது கிடைக்கும்: சிரஞ்சீவி ஆருடம்

தனுசுக்கு தேசிய விருது கிடைக்கும்: சிரஞ்சீவி ஆருடம்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 20-ந்தேதி வெளியான படம் ‘குபேரா’. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான குபேரா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி 2 நாளில் ரூ.30 கோடி
வசூலை பெற்றது.இதையடுத்து படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் தனுஷ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோர்
பங்கேற்றனர். விழாவில் சிரஞ்சீவி பேசியது, தேவா கேரக்டரை தனுசை தவிர வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்த கேரக்டருக்காக
தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய
விருது கிடைக்கும். அவருக்கு விருது
கிடைத்தால் அனைவருக்கும் பெருமை
சேர்க்கும் என்றார்.

Comments (0)
Add Comment