ஆகஸ்ட் 26ல் “டாக்ஸிக்”படம் ரிலீஸ்
யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம், ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா மற்றும் டிக்கெட் ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் கன்னடம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.