தாய் மகன் பாசத்தை பேசும் படம் ‘செல்லமடா நீ எனக்கு’
கலைமகள் புரொடக்சன் சார்பில் சிறுமடை லிங்கம்.எஸ். தயாரிக்க ஆனந்த் சிவம் இயக்கியுள்ள படம் செல்லமடா நீ எனக்கு. இதில் வசீகரன், நேகா கதாநாயகன், நாயகியாக நடிக்க போஸ் வெங்கட்,’பசங்க’ செந்தி,அமுத வாணன்,மீரா கிருஷ்ணன், ரிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவு செய்ய, கதை,வசனம்,பாடல்களை மதுரா வேள்பாரி எழுத,தாஜ்நூர் இசையமைத்துள்ளார். தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய் இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாகி உள்ள இப்படம் மார்ச் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்ப படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.