ஒன்ஸ்மோர் படம் என் மனதுக்கு மருந்தாக அமைந்தது:அதிதி ஷங்கர்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் லீட் ரோலில் நடிக்க, பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசியது, நான் வாழ்க்கை யில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத் தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். அர்ஜுன் தாஸ் எனக்கு மிகச் சிறந்த நண்பராகி விட்டார். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள் என்றார்.