7ம் தேதி கிருஷ்ணாவதாரம் படம் ரிலீஸ்
பாலிவுட் இயக்குனர் ஹார்டிக் கஜ்ஜர் இயக்கியுள்ள படம் ‘கிருஷ்ணாவதாரம்’.
இதில் சித்தார்த் குப்தா கிருஷ்ணராகவும், சுஷ்மிதா பட் ராதையாகவும் நடித்துள்ளனர். கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் சஜன் ராஜ் குருப் மற்றும் ஷோபா சாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். கிருஷ்ணரின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு புராணகால திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 7 ம்தேதி ரிலீஸ் ஆகிறது. மூன்று பகுதியாக இது வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலும் பாராட்டைப் பெற்றுள்ளது.தற்போது படத்தில் உள்ள ஒன்பது பாடல்களைக் கொண்ட இசை ஆல்பம் வெளியாகியுள்ளது.