சினிமாவான “டேட்டிங்”
அறிமுக இயக்குனர் அசோக் குமார் கலைவாணி இயக்கியுள்ள படம் நீ பாரெவர். இதில் ஹீரோவாக சுதர்சன் கோவிந்த், ஹீரோயின் ஆக அர்ச்சனா ரவி நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீராம், ரித்திகா, சீனிவாஸ், செல்வா, பிருந்தா,வித்யா, சினேகா, சக்தி பிரதோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும்
ஈடன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். அஸ்வின் ஹேமந்த் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அசோக்குமார் கூறுயது, ‘இன்றைய ஜென்சி கிட்ஸ் அதிகமாக சொல்லும் வார்த்தை டேட்டிங். இதற்காகவே தனியாக இணைய செயலி இருக்கிறது. அப்படி டேட்டிங் செய்வதில் உள்ள பிரச்சனைகளை விரிவாகவும், மக்களுக்கு புரியும் விதத்திலும் சொல்லி இருக்கிறோம்.