குட்டீஸ்களை கவர வரும் “மரகதமலை”
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது “மரகதமலை”.
அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.இதில் சந்தோஷ் பிரதாப் ஹீரோவா நடிக்க, தீப்ஷிகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். .
புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த மரகதமலை படத்தை ஏப்ரல் 3ஆம் தேதி கோடை விடுமுறை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் வெளியிடுகிறார்