ஷூட்டிங் முடித்த லவ் ஓ லவ் படக் குழு
மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் லவ் ஓ லவ்.இதில் பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார்,வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஃபாக்சன் ஜோடி இசை அமைத்துள்ளனர். தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் ஆர் யூ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டது குறிப்பிடதக்கது.