ஒரு நொடியை அடுத்து ஜென்ம நட்சத்திரம்

ஒரு நொடியை அடுத்து ஜென்ம நட்சத்திரம்
’ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்தில் சேர்ந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை வரும் 18 ஆம் தேதி ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் தமன் பேசியது, ஒரு நொடி படம் பார்த்தப் பிறகு எப்படி எங்களுக்கு இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும் என்றார்.

Comments (0)
Add Comment