விஜய், அஜித் குறித்து தமன்னா சொன்ன சுவாரஸ்யம்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தில் ஹீரோயின் ஆக தமன்னா நடித்த வருகிறார். சென்னையில் இதன் முதல் கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை தமன்னா பங்கேற்றார். அப்போது அவரிடம் விஜய், அஜித் குறித்து பேசுமாறு கல்லூரி மாணவ- மாணவிகள் கேட்டனர். இதைத்தொடர்ந்து பேசிய தமன்னா கூறியது,விஜய் மிகவும் எளிமையானவர். அவைர போல் ஒருவரை நான் சினிமாவில் பார்த்ததில்லை. மிகவும் மென்மையாக பேசுவார், ஆனால் ஷூட்டிங்கில் டான்ஸ் ஆடத் தொடங்கினால் திரையில் அவரைவெற்றி பெற யாரும் இல்லை. அதே போல் அஜித் மிகவும் இனிமையானவர். கேரவனில் வைத்து சுட சுட இட்லி செய்து தருவார். படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சுடச்சுட பிரியாணி சமைத்து பரிமாறுவார். அவரது சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.