இன்பன் உதயநிதி வெளியிடும் இட்லி கடை
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் நித்யாமேனன்,ராஜ்கிரண், பார்த்திபன், இளவரசு ஆகியோர் நடித்துள்ளளர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ந் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி படத்தை வெளியிடுகிறார்.