சொட்ட தல கெட்டபில் பட விழாவுக்கு வந்த ஹீரோ

சொட்ட தல கெட்டபில் பட விழாவுக்கு வந்த ஹீரோ
திரையுலகில் சமீபமாக படகெட்டப்பிலேயே ஹீரோக்கள் விழாவுக்கு வருகின்றனர். கூலி படத்துக்காக நாகார்ஜுனா, அமீர்கான், மார்கன் படத்திற்காக விஜய் ஆண்டனி, யாதும் அறியான் படத்துக்காக அறிமுக நடிகர் தினேஷ் ஆகியோர் மேடைக்கு வந்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற படத்தின் மூலம் ஹீரோவான நிஷாந்த் ரூஷோ, தற்போது அவர் நடித்துள்ள சொட்ட சொட்ட நனையுது என்ற படத்துக்காக சொட்ட தல கெட்டபில் பட விழாவுக்கு ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார்.ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் நவீத் எஸ். ஃபரீத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இப்படி நிஷாந்த் வருகை தந்தார்.இதில் வர்ஷிணி, ஷாலினி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Comments (0)
Add Comment