ஃபேமிலி ஆடியன்ஸ்சை கவர்ந்த தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இதில் சரவணன்,தீபா சங்கர், ரோஹித்,செம்பொன் வினோத், ஆர் கே சுரேஷ், யோகி பாபு, சென்ராயன், காளி வெங்கட், மைனா நந்தினி,ரோஷினி ஹரிப்பிரியன் ஆகியோ நடித்துள்ளனர். படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணனின் இசை அமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார். கடந்த 25ஆம் தேதி வெளியான இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ்சை கவர்ந்துள்ளது. கணவன் மனைவிக்குள் உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதன் மூலம் உறவுகளுக்குள் விரிசல் வராது என்பதை அவருடைய பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ்.
மனைவி மட்டும் சரியாக இருந்தால் போதாது மாமியாரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது இப்படம்.