ரஜினி கமல் இணையும் படத்தை தயாரிக்கும் வாரிசுகள்

ரஜினி கமல் இணையும் படத்தை தயாரிக்கும் வாரிசுகள்
ஜெய்லர் 2 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினி, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம் சார்பில் கமல் தயாரிக்கிறார். இதையடுத்து கமல் ரஜினி இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்காக புரோமோ சூட் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி, ராஜ்கமல் பிலிம் சார்பில் ஆகியோர் தயாரிக்க உள்ளனர். அதோடு ரஜினி மற்றும் கமல் இருவரின் சம்பளத்திற்கு பதிலாக வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் சுருதிஹாசன் இருவரும் இணை தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment