வெறும் 1000 ரூபாயில் தொடங்கிய ‘குட் டே’ படம்
96, மெய்யழகன் படங்களின் இயக்குனர் பிரேம்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரிக்க, மற்றொரு உதவி இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில் உருவான படம் “குட் டே”. இதில் பிரித்விராஜ் நடிகராகவும் அறிமுகமாகிறார். அவருடன் காளி வெங்கட், மைனா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது. இதை ஒட்டி நடந்த இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசியது, எனது நண்பர் அரவிந்துக்காக இந்தப் படத்தை தொடங்க முடிவு செய்தபோது கையில் வெறும் ரூ.1000 மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு பல்வேறு நண்பர்கள் செய்த உதவியால் இந்த படம் உருவானது என்றார்.