ஹைக்கூ’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது

 

ஹைக்கூ’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது
ஜோ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் ஏகன், அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் ஹீரோவாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். தற்போது ‘ஹைக்கூ’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார்.விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் இந்த படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள து. அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்குகிறது இதில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

Comments (0)
Add Comment