சர்வைவல் த்ரில்லராக உருவாகியுள்ள படம் “பல்ஸ்”

சர்வைவல் த்ரில்லராக உருவாகியுள்ள படம் “பல்ஸ்”
நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் பல்ஸ். இதில் ஹீரோயினாக ஷ்ரத்தா தாஸ் நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக சாஹிதி அவான்சா நடித்துள்ளார்.மேலும் ஆர்.வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின், கூல் சுரேஷ், அர்ச்சனா, சரத் உட்பட பலர் நடித்துள்ளனர். அபிஷேக் இசையமை த்துள்ள இப்படத்தை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகுராஜ் ஜெயபாலன் தயாரித்துள்ளார். இப்படத்தை டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இப்படம் சர்வைவல் த்ரில்லர், அரசு மருத்துவமனையில் நடக்கும் கதை. இதில் மகேந்திரன் சவாலான பாத்திரத்தில் நடித்துள்ளார், கிளைமாக்ஸில் டூப் இல்லாமல் செய்த சண்டைக் காட்சிகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

Comments (0)
Add Comment