மீண்டும் தள்ளிப்போன பவன் கல்யாண் படம்
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹரி வீரமல்லு. இந்த படம் வரும் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் மற்றும் பணப்பிரச்சினை காரணமாக படம் நள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக இதுவரை 10 முறை பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.