சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டை குவிக்கும் “மாண்புமிகு பறை” படம்

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டை குவிக்கும் “மாண்புமிகு பறை” படம்
அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கியுள்ள மாண்புமிகு பறை படம், ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.
இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸில் நடைபெறும் உலகத் திருவிழாவில் கலந்து கொண்டு, அதிகாரப்பூர்வ தேர்வில் சிறந்த சமூக நீதிக்கான திரைப் படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் 27 அன்று வெளியாகிறது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்று கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம் என்ற பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.. சியா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். கதையின் நாயகனாக லியோ சிவக்குமார் நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment