வா வாத்தியார் படத்துக்கு வந்த சோதனை

வா வாத்தியார் படத்துக்கு வந்த சோதனை
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படம் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. அதன் பிறகு12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, அதுவும் தள்ளி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து விரைவில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.

Comments (0)
Add Comment