தனுஷ் படத்தை இயக்கும் லப்பர் பந்து பட இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 55வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து aதனுஷின் 56வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என அறிவித்தனர். இந்நிலையில் தமிழரசன் பச்சமுத்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு கோவிலில் உட்கார்ந்துள்ள போட்டோவை பகிர்ந்து ‘கெளம்பியாச்சு’ #டி56 என்கிற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷின் 56வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ள து. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதே நேரம் மாரி செல்வராஜ் படம் மிகப்பெரிய படம் என்பதால் முன் தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் இந்தபடம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.