தயாரிப்பாளரான டைரி பட இயக்குனர்

தயாரிப்பாளரான டைரி பட இயக்குனர்

‘டைரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இன்னாசி பாண்டியன், தனது அடுத்தகட்ட திரைப்பயணமாக ‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ் எல்.எல்.பி’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், 4ஆண்டுகளுக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இரண்டாவது திரைப்படமான ‘புல்லட்’ படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் படம் வெளியாக இருக்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளுடன் தனது வாழ்க்கைக்கும் வேர்களுக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் ‘வெஸ்டர்ன் காட்ஸ் பிக்சர்ஸ்’ என்ற பெயரை தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியுள்ளதாக இன்னாசி பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த புதிய நிறுவனத்தின் மூலம் தனது முதல் தயாரிப்பை விரைவில் ரசிகர்கள் முன் கொண்டு வர இருக்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment