‘குமார சம்பவம்’ படம் மூலம் நிறைவேறிய குமரனின் ஆசை
பாலாஜி வேணுகோபால் இயக்கி உள்ள படம் ‘குமார சம்பவம்’. இதில் குமரன், பாயல் ராதாகிருஷ்ணா,பால சரவணன், ஜி.எம். குமார், வினோத் சாகர் உள்பட பலர் நடித்து உள்ளனர். படத்திற்கு அச்சு ராஜா மணி இசை அமைக்க,வீனஸ் இன்போடெயின்மெ ன்ட் சார்பில் கே.ஜே.கணேஷ் தயாரித்துள் ளார். வரும் 12-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் குமரன் பேசியது,இது 16 வருட லட்சியம். எப்படியாவது சினிமாவில் ஹீரோ ஆகி விட வேண்டும் என்பது என் பெரிய கனவு. என் அப்பா டீக்கடையில் வேலை பார்த்தார்.அவர் என்னை சினிமாவில் போய் ஹீரோ ஆகிவிடு என்று சொன்னார். அந்த ஆசை எனக்கும் இருந்தது. அப்பாவுடைய கனவை நனவாக்க ஆசைப்பட்டேன். அதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒரு என்ட்ரி கிடைத்தது. அதன் மூலம் தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் ஹீரோவாக நடித்து விட்டேன். இது என்னுடைய வாழ்க்கையில்
பெரிய சம்பவம் என்றார்.