‘ஜோ’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்

‘ஜோ’ பட இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்
லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்களில் இருந்து முழுக்க முழுக்க இது வித்தியாசமான படமாக இருக்கும். இதற்காக ஜி வி தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு இடங்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Comments (0)
Add Comment