ரித்விகா, தர்ஷிகா நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன் ‘ஜூலை 17-ல் ரிலீஸ்

ரித்விகா, தர்ஷிகா நடித்துள்ள ‘தி டார்க் ஹெவன் ‘ஜூலை 17-ல் ரிலீஸ்
‘தி டார்க் ஹெவன்’ மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை மையமாக வைத்து இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகிறது. இதில் கதாநாயகனாக சித்து சித் நடிக்க, பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு மணிகண்டன். பி.கே. ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி கூறியது, ஒரு மலைக்கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைக ளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தா ரா என்பதை மையாமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது என்றார்.

Comments (0)
Add Comment