சர்ச்சையான கதையில் உருவான ‘மரியா’.
அறிமுக இயக்குனர் ஹரி கே.சுதன் இயக்கி உள்ள படம் ‘மரியா’. இதில் கன்னியாஸ்திரி கேரக்டரில் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிக்கிறார். மேலும் பாவல்நவகீதன், விக்னேஷ் ரவி, சித்து குமரேசன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் கோபால கிருஷ்ணன் பாரதி இசை அமைத்து உள்ளார்.கன்னியாஸ்திரியாக உள்ள ஒரு பெண்ணிற்கு திடீரென பெண்மையின் உணர்ச்சி வெளிப்படுகிறது. தன்னுடைய நிலையை எண்ணி அவர் என்ன முடிவு செய்தார்.அதை இந்த சமூகமும்,வீடும் எப்படி அணுகியது என்பு தான் கதை. இப்படம் மலேசியா, லண்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.