ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் ‘சோழநாட்டான்’
“பட்டுக்கோட்டை” ரஞ்சித் கண்ணா இயக்கும் படம் ‘சோழநாட்டான்’.இதில் உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜன், நரேன், சீதா, பரணி, விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார்.முழுக்க முழுக்க ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசும் படமாக உருவாகிறது. விஜயகாந்த் நடித்த ‘உழவன் மகன்’ படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது.