தி பெட் -விமர்சனம்

தி பெட் -விமர்சனம்
நண்பர்களான ஸ்ரீகாந்த், பிளாக்பாண்டி, வி.ஜே.பப்பு, விக்ரம் ஆகியோர் வீக் எண்டை கொண்டாடுவதற்காக ‘கால் கேர்ள்’ ஆன சிருஷ்டி டாங்கேவை ஊட்டிக்கு அழைத்து செல்கின்றனர். ஊட்டி ரிசார்ட்டில் 5 பேரும் தங்கி இருக்கும் போது சிருஷ்டிடாங்கே காணாமல் போகிறார். அவரை தொடர்ந்து நண்பரான விக்ரமும் காணாமல் போகிறார்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் இதுகுறித்து விசாரிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. நடிகர் ஸ்ரீகாந்த் பீக்கில் இருந்த போது எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது அவர் மார்க்கெட் இழந்த நிலையில் ரிலீஸ் ஆகி உள்ளது. தனது கேஷுவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சிருஷ்டி டாங்கே ‘கால்கேர்ள்’ கேரக்டரில் தாராள கவர்ச்சியில் நடித்துள்ளார்.பிளாக் பாண்டி, வி.ஜே.பப்பு மற்றும் விக்ரமின் நடிப்பு ஓகே.ஜான் விஜய் அதே பாடி லாங்குவேஜ். இன்றைய யூத் செய்ய நினைக்கும் வேலையை, சமூக விழிப்புணர்வோடு, ஒரு பொழுதுபோக்கு படமாக இயக்கி உள்ளார் மணிபாரதி. லாஜிக் மீறல்கள் மற்றும் சொல்ல வந்த கருத்துக்களில் அழுத்தமின்மை பலகீனம். கோகுல் ஒளிப்பதிவு ஓகே, தாஜ் நூர் இசை
சுமார் ரகம்.

Comments (0)
Add Comment