தீபாவளிக்கு அரசன் படம் ரிலீஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’.இதில் பிரியங்கா மோகன், அமீர்,சமுத்திரகனி, ஆண்ட்ரியா,கிஷோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது.அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னை ஈசிஆர் பகுதியில் நடக்கிறது. இதற்காக வடசென்னை பகுதி போன்று தத்ரூபமாக செட்டு போடப்பட்டு ள்ளது. இதில் சிம்பு மற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. 3 மாதத்தில் படப்பிடிப்பை முடித்து வரும் தீபாவளிக்கு படத்தை வேலை செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு திட்டமிட்டுள்ளனர்.