மஞ்சுவிரட்டு வீரராக நடிக்கும் விமல்
நடிகர் விமல் சார் படத்திற்குப் பிறகு தற்போது பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாசாணி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விமல் நடிக்கவிருக்கிறார். மஞ்சு விரட்டை மையமாக கொண்ட இதில் காதல், நட்பு, ஆக்ஷன்,குடும்ப உணர்வை கூறும் படமாக உருவாகிறது.இதில் பாலா சரவணன், நரேன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்க, கதை எழுதி கேந்திரன் இயக்குகிறார்.