தனுஷ் நடிக்கும் 55 வது படம் துவக்கம்

தனுஷ் நடிக்கும் 55 வது படம் துவக்கம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி மொழி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா, தேரே இஷக் மே போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பைபெற்றன. அடுத்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் தனுஷ் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்கிறார். இதை தனுசின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக்
நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Comments (0)
Add Comment