யுவன் குரலில் சிறை படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ்

யுவன் குரலில் சிறை படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ்
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் “சிறை”.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகர் இசையில், .யுவன் சங்கர் ராஜா குரலில் “மின்னு வட்டம் பூச்சி”என்ற இந்த பாடல் சென்னை விஐடி பல்கலை கழகத்தில் மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.

Comments (0)
Add Comment