போலீசாக கலக்கும் தன்யா ரவிச்சந்திரன்

போலீசாக கலக்கும் தன்யா ரவிச்சந்திரன்
எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில்,தன்யா ரவிச்சந்திரன் லீட் ரோலில் நடித்துள்ள படம் ‘றெக்கை முளைத்தேன்’. முற்றிலும் புதிய ஜானரில் விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் மூலம் அவரே தயாரித்துள்ளார்.படத்திற்கு தரண் குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
படம் பற்றி இயக்குனர் கூறியது, கல்லூரி யில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைக்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும் என்றார்.

Comments (0)
Add Comment