ஹார்ட் பீட்-3ல் இருந்து விலகிய தேஜு
டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை யோகலட்சுமி, ஹார்ட் பீட் வெப் சீரிஸில் தேஜு என்ற கேரக்டரில் நடித்தார். அதில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தற்போது உருவாகி வரும் ஹார்ட் பீட் சீசன் 3-ல் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஹார்ட் பீட் தொடரில் இருந்து விலகுகிறேன். இந்தத் தொடரில் நான் நடித்த ‘தேஜு’ கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. உங்களைப் போலவே நானும் தேஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனால் இது ‘குட் பை’ கிடையாது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காக நான் தொடர்ந்து நடித்துக்கொண்டே தான் இருப்பேன் என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகை யோகலட்சுமியின் இந்தத் திடீர் விலகல் முடிவுக்கு முக்கிய காரணம், அவர் அரசன் திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருவது தான் இதில் இருக்கு விலகுவதற்கு காரணமாம்.