கயல் சந்திரன் நடிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு
ருத்ரம் சினிமாஸ் மற்றும் எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சிங்கா. இந்த படத்தை ராஜ துரை சிங்கம் இயக்கி யுள்ளார். இவர் இயக்குனர்கள் வசந்த் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகி யுள்ள இந்தப் படத்தில் கயல் சந்திரன் லீட் ரோலில் நடித்துள்ளார். அவருடன் சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர் மற்றும் மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ‘காதுக்குள்ள குருவி’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.