வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் தமிழ் முருகன்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் தமிழ் முருகன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் ஆகிய நான்கு படங்களும் மெகா ஹிட் ஆக மாறியதுடன் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது. தற்போது இதே கூட்டணி மீண்டும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் முருகன் என்ற புதிய பீரியட் படம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு வீடியோ நேற்று முன் தினம் இரவு வெளியானது. கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும், தனுஷின் ஒண்டர் பார் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே போல் இயக்குனர் வெற்றிமாறனும் சிலம்பரசனை வைத்து அரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு இந்த படத்தில் இருவரும் பணியாற்ற உள்ளனர்.

Comments (0)
Add Comment