நகைக் கடை தொடங்கிய தமன்னா
திரை உலக பிரபலங்கள் பலர் சினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், ஹோட்டல் அழகு சாதன பொருள், ஜுவல்லரி மற்றும் பொட்டிக் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து, நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். ஏற்கனவே சமந்தா,நயன்தாரா ஆகியோர் அழகு சாதன பொருட்கள் மற்றும் நகை தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் நடிகை தமன்னாவும் புதிதாக தங்க நகை ஜுவல்லரி ஒன்றை தொடங்கி இருக்கிறார்.தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா,ஹீரோயின் மட்டுமின்றி ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி கோடிகளை குவித்து வருகிறார்.ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.6 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.