பாங்காங்கில் தமன்னா
நடிகை தமன்னா தற்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ‘ஒடேலா 2’ (தெலுங்கு) மற்றும் ‘அரண்மனை 4’ (தமிழ்) ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பாலிவுட்டில் ‘வேதா’ மற்றும் ‘சிக்கந்தர் கா முக்தார்’ போன்ற படங்களிலும் நடித்துள்ள அவர் கடந்த மாதம் கோவாவில் நடந்த குஷ்பு மகள் அவந்திகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் தங்க நிறத்தில் அவர் அணிந்து வந்த பட்டுப்புடவை பார்வையாளர்களை வசீகரிக்க செய்தது. இந்த நிலையில் தமன்னா பாங்காங்கில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் அணிந்து வந்த ஆடை பார்வையாளர் களை மிகவும் கவர்ந்தது. விழாவில் பங்கேற்ற தமன்னாவின் தோற்றம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.